ஃபுளோரிடா, 30 மார்ச் (பெர்னாமா) -- ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதோடு ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்களை அனுமதிக்க அந்நாடு தயாராகி வருவதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்தார்.
ஃபுளோரிடாவிற்கான பயணத்தின்போது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
"இரு நாட்களுக்கு முன்னர், அவர்கள் எட்டு கப்பல்களை அனுப்ப ஒப்புக்கொண்டது உங்களுக்குத் தெரியும். பின்னர், மேலும் இரண்டைச் சேர்த்தார்கள். ஆக மொத்தம் 10 கப்பல்கள். இப்போது இன்று, ஒரு மரியாதையின் அடையாளமானது. எனக்குத் தெரியவில்லை, அதை என்னால் சரியாக கூற முடியவில்லை. ஆனால் மரியாதையின் அடையாளமானது என்று நான் நினைக்கிறேன். 20 பெரிய, மிகப் பெரிய எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாக எங்களுக்கு அனுப்பியுள்ளனர். இது நாளை காலை முதல் தொடங்கப்படும்", என்றார் அவர்.
நடைபெற்றும் வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நல்லெண்ணத்தின் அடையாளமாக ஹோர்முஸ் நீரிணையில், 10 எண்ணெய் கப்பல்களைக் கடந்து செல்ல ஈரான் அனுமதிப்பதாக கடந்த வியாழக்கிழமை டிரம்ப் அறிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)