Ad Banner
Ad Banner
 பொது

புதைக்கப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு; தாய் உட்பட ஐவர் கைது

26/03/2026 06:51 PM

மலாக்கா, 26 மார்ச் (பெர்னாமா) --  மலாக்கா, கெலெமாக்கில் உள்ள தமது வீட்டின் முன்புறத்தில் ஒரு குழந்தை புதைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில், அதன் தாய் என்று நம்பப்படும் 19 வயது பெண் ஒருவர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்கப்பட்ட ஐவரில் அப்பெண்ணும் ஒருவராவார்.

16-இல் இருந்து 40 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவரும் இன்று தொடங்கி நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்படுவதற்கான உத்தரவை, அலோர் காஜா நீதிமன்ற நீதிபதி கமாரூல் அரிஸ் கமாலுடின் இன்று பிறப்பித்தார்.

குழந்தை பிறப்பை மறைத்து வைத்த குற்றத்தின் அடிப்படையில், குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 318-இன் கீழ், விசாரணைக்காக அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு பிறந்ததாக நம்பப்படும் குழந்தையின் புதைக்கப்பட்ட எலும்புக்கூடு நேற்று, கெலெமாக்கில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் மீட்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)