Ad Banner
Ad Banner
 பொது

ஜேபிஜே வாகனங்கள் தொடர்பில் 2 சம்பவங்கள்; 2 உறுப்பினர்கள் தற்காலிக பணி நீக்கம்

24/03/2026 03:37 PM

ஈப்போ, 24 மார்ச் (பெர்னாமா) - கடந்த வெள்ளிக்கிழமை Tanah Merah-வில் நிகழ்ந்த மரண விபத்து உட்பட, சாலைப் போக்குவரத்துத் துறை, JPJ-வின் வாகனங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அத்துறை தனது இரண்டு உறுப்பினர்களை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

மேலும், இரட்டைக் கோட்டில் ஜேபிஜே வாகனம் ஒன்று முந்தி செல்லும் காட்சி கொண்ட காணொளி பரவலாகப் பகிரப்பட்டது தொடர்பான மற்றொரு சம்பவத்திலும் அதே வாகனமும் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளதை JPJ தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி கூறினார்.

இங்கே அவருக்கு இரண்டு பிரச்சனைகள் உள்ளன. இரண்டு வெவ்வேறு சூழ்நிலைகள் உள்ளன. ஒன்று விபத்து, மற்றொன்று ஜேபிஜே வாகனம் இரட்டைக் கோட்டில் முந்தி சென்றக் காட்சிகளைக் கொண்ட காணொளி தொடர்பானது. மேல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட உறுப்பினரை இடைநீக்கம் செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இரட்டைக் கோட்டில் முந்திச் சென்ற விதிமீறலுக்காக. எனவே, உள் விசாரணை முடியும் வரை இரு உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர். 

இரண்டாவது சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு ஜேபிஜே வாகனம் மற்றும் பெரோடுவா மைவி காருடன் தொடர்புடைய Tanah Merah, Bukit Bunga, Kampung Rahmat அருகே கோத்தா பாரு - மாச்சாங் - ஜெலி சாலையில் 85.5 கிலோமீட்டரில் நிகழ்ந்த மரண விபத்து சம்பந்தப்பட்டதாகும் என்று அவர் விவரித்தார்.

காணொளி தொடர்பான வழக்கை ஜேபிஜே நிர்வகிக்கும் வேளையில், விபத்து வழக்கை மேல் விசாரணைக்காக ஜேபிஜே முழுமையாகக் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், அதில் ஜேபிஜே ஈடுபடவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)