Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

மயாமி டென்னிஸ்; மெட்வெடேவ் வெற்றி

22/03/2026 04:07 PM

மயாமி, 22 மார்ச் (பெர்னாமா) -- இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் சற்று சிரமத்தை எதிர்நோக்கினாலும், ரஷ்யாவின் டேனில் மெட்வெடெவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பானின் ரெய் சக்காமொட்டொவுடன் டேனில் மெட்வெடெவ் விளையாடினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 6-7 என்று தோல்வி கண்ட மெட்வெடெவ், அடுத்த இரண்டு செட்களை 6-3, 6-1 என்ற புள்ளிகளில் கைப்பற்றினார்.

அடுத்த ஆட்டத்தில், அவர் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவுடன் விளையாடவுள்ளார்.

மற்றோர் ஆட்டத்தில், கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர்-அலியாசிம், ஹங்கேரியின் மார்டன் ஃபுக்சோவிக்சுடன் விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் 7-6 7-5 என்ற நேரடி செட்களில் ஃபெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் வெற்றி பெற்றார்.

ஆடவருக்கான மற்றோர் ஆட்டத்தில், ரஷ்யாவின் ஆண்ட்ரி ருப்லெவ் தோல்வி கண்டார்.

முதல் செட்டில் 7-6 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றாலும் அடுத்த இரண்டு செட்களில் 6-2 6-4 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]