Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரானிய ஏவுகணை ரமாட் கான் குடியிருப்புப் பகுதியைத் தாக்கியதில் இருவர் பலி

18/03/2026 04:18 PM

ஜெருசலம், 18 மார்ச் (பெர்னாமா) -- டெல் அவிவ் அருகிலுள்ள இஸ்ரேலிய நகரம், ரமாட் கான்னில், புதன்கிழமை ஈரானிய ஏவுகணை ஒன்று, அங்குள்ள ஒரு குடியிருப்புப் பகுதியைத் தாக்கியதில் இருவர் உயிரிழந்ததாக இஸ்ரேலிய ஆம்புலன்ஸ் சேவையாளர்கள் தெரிவித்தனர்.

மத்திய இஸ்ரேலில் பல இடங்களில் அத்தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த மோதல்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், பாக்தாத்தின் பசுமை மண்டலத்தில் அமைந்துள்ள ஈராக்கிற்கான அமெரிக்கத் தூதரகம், செவ்வாய்க்கிழமை மாலை ஆளில்லா விமானம் மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு உள்ளானது.

இதனால், அந்த வளாகத்திற்கு அருகிலுள்ள கட்டிடங்களிலும் தீப்பிடித்தது.

அதோடு, பாக்தாத் அனைத்துலக விமான நிலையத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறைந்தது மூன்று ஆளில்லா விமானங்கள் குறிவைத்ததாகவும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் ஈராக் பாதுகாப்பு அதிகாரிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)