| BREAKING NEWS | Super League: PDRM FC 1-6 Negeri Sembilan FC | |
அங்காரா, 13 மார்ச் (பெர்னாமா) -- ஈரான் மீதான போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் பகைமையை தகர்த்தி, சமரச பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா-வின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டேரெஸ் அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பிற நாடுகள் மீதான ஈரானின் அடுத்தடுத்த தாக்குதல்கள் அனைத்துலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது என்று அவர் கவலை தெரிவித்தார்.
''இவ்வட்டாரத்திற்கும் உலகிற்கும் பாதுகாப்பு தளம் ஒன்று அவசியம் தேவைப்படுகிறது. பதற்றத்தைத் தணிப்பதும் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே ஒரே வழி. மேலும், அனைத்து தரப்பினரும் பகைமையை நிறுத்தி, அனைத்துலக சட்டத்தை நிலைநிறுத்தி, பொதுமக்களைப் பாதுகாத்து, உடனடியாக பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்'', என்றார் அவர்.
ஈரான் மீதான போரினால் பொருளாதார சீர்குலைவு, எரிசக்தி மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயர்வு, பாதுகாப்பின்மை மற்றும் உறுதியற்ற தன்மை ஆகியவற்றால் உலக மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அவர் விவரித்தார்.
துருக்கியில் நடைபெற்ற அமைதிக்கான விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய குட்டேரெஸ் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)