Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பட்டாசுக் கடையில் தீ

13/03/2026 01:33 PM

சுக்காய், 13 மார்ச் (பெர்னாமா) --  திரெங்கானு, சுக்காய், கம்போங் கொங் லிமாவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கடையில் தீப்பிடித்ததால், அக்கிராம மக்கள் பீதி அடைந்தனர்.

இன்று அதிகாலை ஏற்பட்ட தீயினால் கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து, மிகப் பெரிய சத்தங்களை எழுப்பியதாக அவர்கள் கூறினர்.

அதிகாலை மணி 4.15 அளவில் தமது வீட்டில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பட்டாசுக் கடையில் ​​பலத்த வெடிச்சத்தத்தையும் அதைத் தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கும் சத்தத்தையும் கேட்டபோது தாம் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்ததாக, கம்போங் கொங் லிமாவில் வசிக்கும் அப்துல் மொபின் ஒமார் என்பவர் தெரிவித்தார்.

''என் மனைவி அதிர்ச்சியடைந்து, பட்டாசு வெடித்ததாக என்னிடம் தெரிவித்தார். அவர் அங்கே துணி தைத்துக் கொண்டிருந்தார். அப்போது என்னிடம் தெரிவித்தார். நான் ஆச்சரியப்பட்டேன். நானும் நெருப்பைக் கண்டேன். நெருப்பு வடிவில் இல்லை. அவை தீப்பொறிகள். அதுதான் ஆபத்தான விஷயம். நான் வெளியே சென்றேன். அவை என்னைத் தாக்குவது போல் இருந்தது. ராக்கெட்டுகள் (பட்டாசுகள்) வேலிக்கு அருகிலும் வீட்டிற்குள்ளும் சென்றன. சுமார் அரை மணி நேரத்திற்குள் அவை வெடித்தன'', என்றார் அவர்.

இந்த தீ விபத்தினால் சுமார் 50,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் குறித்து அதிகாலை மணி 4.15-க்கு தகவல் கிடைத்ததாகவும், சுமார் 19 நிமிடங்களில் தீ முற்றாக அணைக்கப்பட்டதாகவும், சுக்காய் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையத்தின் தலைவர் முஹமட் ஹனிஃப் சே காலிட் தெரிவித்தார்.

இச்சம்பவத்தினால், காயங்கள் அல்லது இறப்புகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்றாலும் தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)