BREAKING NEWS   Super League: PDRM FC 1-6 Negeri Sembilan FC | 
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மேற்காசிய மோதல்: இவ்வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்

12/03/2026 05:04 PM

கோலாலம்பூர், மார்ச் 12 (பெர்னாமா) -- எரிபொருள் விலை உயர்வைக் கடந்து, பொருளாதாரத்தில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலை, தற்போது மேற்காசியாவில் நிகழ்ந்து வரும் மோதல் கொண்டுள்ளது.

இம்மோதல், பணவீக்கம், விநியோகச் சங்கிலி மற்றும் ஒட்டுமொத்த போக்குவரத்து செலவுகளிலும், இவ்வட்டாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசிர் தெரிவித்தார்.

"எரிபொருள் விலை உயர்வுக்கு மட்டுமின்றி அரசாங்கமும் நானும் முன்பு கூறியது போல, இதன் தாக்கத்தின் அளவு அதன் தீவிரத்தைப் பொறுத்தது. மேலும், மோதல் எவ்வளவு காலம் தொடரும் என்பதையும் பொறுத்தது. அதனால்தான், முந்தைய நிலைமை எங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் எங்கள் கவனிப்புக்கும் உட்பட்டது என்று கூறியுள்ளோம்," என்றார் அவர்.

இப்பதற்றம் விரைவில் முடிவு பெறும் என்பதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை என்றாலும், அது முடிவடையும் பட்சத்தில் மீட்பு செயல்முறைக்கு கால அவகாசம் தேவைப்படும் என்று அக்மால் நஸ்ருல்லா விவரித்தார்.

எனவே, உள்நாட்டுப் பொருளாதாரத்தில் இம்மோதலின் தாக்கத்தை மதிப்பிட, தமது அமைச்சு முதன்மை அறிகுறிகளைத் தொடர்ந்து துல்லியமாகக் கண்காணிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இன்று, வியாழக்கிழமை, புத்ராஜெயாவில் MyRMK அமைப்பைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அக்மால் நஸ்ருல்லா அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)