BREAKING NEWS   Super League: PDRM FC 1-6 Negeri Sembilan FC | 
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

வீட்டில் இருந்து வேலை செய்யும் செயல்முறை; அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும்

12/03/2026 04:54 PM

புத்ராஜெயா, மார்ச் 12 (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, பொதுச் சேவைத் துறையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் செயல்முறையை அமல்படுத்தும் பரிந்துரை குறித்து முதலில் ஆராயப்படவிருப்பதோடு நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.

முன்னதாக, வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையைச் செயல்படுத்தியதன் வழி, தொற்றுநோய் காலக்கட்டத்திற்குப் பின்னர், சில நிறுவனங்கள் கலவையான வேலை முறைகளை மேற்கொண்டு வருவதை அரசாங்கம் அறிந்திருப்பதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

"தொற்றுநோய்க்கு பின்னர், பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை உட்படுத்தி கலவையான வேலை செயல்முறைகளைச் செயல்படுத்துகின்றன என்பதை நான் அறிவேன். மேலும், வீட்டில் இருந்து வேலை செய்வதை அரசாங்கம் ஆராயுமா என்பது குறித்து நாளை நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்படும்," என்றார் அவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)