Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

2026-இல் 14 ஆயிரம் கோடி ரிங்கிட் முதலீட்டை ஜோகூர் மாநிலம் இலக்காகக் கொண்டுள்ளது

11/03/2026 08:19 PM

ஜோகூர் பாரு, மார்ச் 11 (பெர்னாமா) -- கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச முதலீட்டு தொகை 11 ஆயிரம் கோடி ரிங்கிட் பதிவானதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அதன் முதலீட்டு வளர்ச்சியை 14 ஆயிரம் கோடி ரிங்கிட்டாக அதிகரிக்க ஜோகூர் மாநில இலக்கு கொண்டுள்ளதாக மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி  தெரிவித்தார்.

அந்த இலக்கை அடைவது கடினம் என்று சிலர் கருதினாலும், கையெழுத்திட்ட ஓர் ஆண்டுக்குள் 11 ஆயிரம் ரிங்கிட் முதலீடுகளை ஈர்க்க முடிந்த ஜோகூர் சிறப்பு பொருளாதார மண்டலம் JS-SEZ ஒப்பந்தத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதனை அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

''இது மிகவும் கடினமானதாக கருதுவதோடு சிலர் அதனை அடைய முடியுமா என்று கேள்வி எழுப்பலாம். எனினும், முதலில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 11 ஆயிரம் கோடி ரிங்கிட் தொடக்கத்தில் சாத்தியமற்றதாக கருதப்பட்டதால், அதனை அடைய முடியும் என்று நம்புகிறேன்,'' என்றார் அவர்.

''ஜோகூரிடம் ஆற்றல் அதிகமாக இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதனை கருத்திக் கொண்டு கடுமையாக உழைத்தால் நினைத்ததை அடைய முடியும்,'' என்றார் அவர். 

அண்மையில், ஜோகூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சௌஜானாவில், பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ்-சின் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலின்போது, மச்சாப் சட்டமன்ற உறுப்பினருமான  ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு புள்ளிவிவரங்களை விவரித்ததோடு, ஜனவரி கையெழுத்திடப்பட்ட JS-SEZ ஒப்பந்தத்தையும் அவர் பார்வையிட்டார்.

விரைவில் அறிமுகப்படுத்தப்படும் முதலீட்டு முதன்மைத் திட்டம் மற்றும் செயல் திட்டம், மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு ஊக்குவிப்பாகவும் இருக்கும்.

முன்னதாக,  ஊக்குவிப்பு தொகைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் JS-SEZ செயல்பாட்டு கட்டுமைப்பு ஆகியவற்றை உட்படுத்திய இத்திட்டம் மார்ச் 30ஆம் தேதி தொடங்கப்படும்.

ஜோகூரில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதால், இந்த விவகாரம் மாநில அரசாங்கத்தின் திட்டங்களில் உள்ளது என்று அவர் கூறினார்.

"அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. நான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, பலர் சந்திக்க விரும்புகிறார்கள். ஆனால், நேரம் பற்றாக்குறையாக உள்ளது,'' என்றார் அவர்.

இது தொடர்பில், கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவிற்கு பணி நிமித்தமாக, பயணம் மேற்கொண்டிருந்தபோது சந்தித்த முதலீட்டாளர்களைச் சந்திக்க மீண்டும் ஷாங்காய் செய்ய விரும்புவதாக அவர் கூறினார்.

JS-SEZ மூலம் சிங்கப்பூருடன் ஜோகூர் இணைந்து செயல்படுவதினால் வெளிநாட்டு நிறுவனங்கள் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான நம்பிக்கை அதிரிக்கும்.

அதோடு, முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு இனி தீவிரமான சந்தைப்படுத்துதல் விளம்பரங்கள் தேவையில்லை என்று அவர் கூறினார்.

''ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இடையிலான ஒத்துழைப்பை வெளிநாட்டு நிறுவனங்கள் கவனிக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சிங்கப்பூரும் நற்பெயரைக் கொண்டுள்ளது,'' என்றார் அவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)