| BREAKING NEWS | Super League: PDRM FC 1-6 Negeri Sembilan FC | |
லக்னோ, மார்ச் 11 (பெர்னாமா) -- வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு கலன் எல்.பி.ஜி விநியோகத்தில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்டிப் சிங் பூர் நேற்று தெரிவித்திருந்தார்.
எரிவாயு கலன் குறித்து வெளிவந்த செய்திகளால் பதற்றமடைந்து மக்கள், பீதியில் அவற்றை வாங்குவதாக வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து, பயனிட்டாளர்களை அமைதிப்படுத்தும் முயற்சியாக ஹர்டிப் சிங், தமது X பதிவில் அந்த அறிவிப்பைச் செய்தார்.
உலகின் இரண்டாவது பெரிய எல்.பி.ஜி இறக்குமதியாளரான இந்தியா, உள்நாட்டு தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க அவசரகால விதிகளை செயல்படுத்தியுள்ளது.
மேலும், உள்நாட்டைச் சேர்ந்த பயனீட்டாளர்களுக்கான உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு நிறுவனங்களையும் தொடர்ந்து வழிநடத்தி வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)