Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

வர்த்தக வழியில் ஏற்பட்ட இடையூறு; சிரமத்தை எதிர்நோக்கும் விவசாயிகள்

11/03/2026 06:55 PM

ஜம்மு, மார்ச் 11 (பெர்னாமா) -- வளைகுடா வர்த்தக வழியில் ஏற்பட்ட இடையூறினால், அரிசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால், இந்தியாவின் வடக்கு ஜம்முவில் உள்ள நெல் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வார இறுதியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தாக்கியதைத் தொடர்ந்து, சரக்கு கப்பல் கட்டணங்கள் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

சுமார், நான்கு லட்சம் மெட்ரிக் டன் இந்திய பாஸ்மதி அரிசி, துறைமுகங்களிலும் பயணத்திலும் சிக்கியிருப்பதால், புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களும் தடைப்பட்டுள்ளதாக வர்த்தக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகளாவிய கப்பல் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால், காப்புறுதி நிறுவனங்கள் கப்பல்களுக்கான காப்புறுதியை ரத்து செய்ததைத் தொடர்ந்து, கொள்கலன் கப்பல்கள் அந்த நீர்வழிப் பாதையை தவிர்த்து வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)