| BREAKING NEWS | Super League: PDRM FC 1-6 Negeri Sembilan FC | |
புத்ராஜெயா, 09 மார்ச் (பெர்னாமா) -- மக்களுக்கு சுமை ஏற்படுத்தாத வகையில் ரோன்95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னாக நிலைநிறுத்த அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டாலும், இலக்கிடப்பட்ட உதவித்தொகை திட்டம் வழி ரோன்95 பெட்ரோலின் விலை நாட்டில் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
''இன்றைய எண்ணெய் விலை, எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர் உயர்ந்துள்ளது. நாம் இன்னும் ஒரு ரிங்கிட் 99 சென்னில் தாக்குப் பிடித்துள்ளோம். புடி 95. மேலும் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், முயற்சிப்போம்'', என்றார் அவர்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
அதைத் தொடர்ந்து வளைகுடா நாட்டுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தெஹ்ரானும் பதில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளுக்குத் தயாராகும் வகையில் மக்கள் தங்கள் செலவினங்களைத் திட்டமிடவும், சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும் அன்வார் அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)