புத்ராஜெயா, 09 மார்ச் (பெர்னாமா) -- இரண்டாம் கட்ட ரஹ்மா உதவித் தொகை, எஸ்.டி.ஆர் வரும் மார்ச் 10ஆம் தேதி தொடங்கி 52 லட்சம் பேருக்கு வழங்கப்படும்.
130 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டிலான இந்த உதவித் தொகை கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
''ஏப்ரல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் கட்ட எஸ்.டி.ஆர் தொகையை வழங்கினோம். நோன்பு பெருநாளை முன்னிட்டு முன்கூட்டியே மார்ச்சாம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாம் கட்ட எஸ்.டி.ஆர் தொகையை வழங்கவுள்ளோம்'', என்றார் அவர்.
இன்று உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஊழியர்கள் உடனான சந்திப்பில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, மார்ச் 13ஆம் தேதி ஒப்பந்த ஊழியர்கள் உட்பட Gred 56 மற்றும் அதற்கு குறைவான பொதுச் சேவை ஊழியர்களுக்கு பி.கே.கே எனப்படும் சிறப்பு நிதி உதவியாக 500 ரிங்கிட் வழங்கப்படும்.
அதே தேதியில், ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்கள், ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறாத முன்னாள் படைவீரர்களுக்கு 250 ரிங்கிட் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)