பிந்துலு, 06 மார்ச் (பெர்னாமா) -- குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நிறைவேற்றப்படாததாக வகைப்படுத்தப்பட்டிருந்த பிந்துலு, மலேசிய ஒளிபரப்புத் துறை, ஆர்.டி.எம்-மின் கட்டுமானத் திட்டம், மறுகுத்தகை செயல்முறைக்குப் பின்னர் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு கோடியே 77 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள இத்திட்டம், பொது குத்தகை மூலம், லராஸ் ஜெயா Construction நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும் 18 மாதங்களுக்குள் அதன் கட்டுமானம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
''உண்மையில் முதல் திட்டம் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கியது. மேலும், அவர்கள் இத்திட்டத்தை 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால், நாங்கள் அவர்களுக்கு 9 EOT வழங்கிய பிறகு, அதில் 225 நாட்கள் அடங்கிய நிலையில், 44.1 விழுக்காடு மட்டும் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதைக் கண்டோம்'', என்றார் அவர்.
இன்று பிந்துலு, பொதுப்பணித் துறை, ஜே.கே.ஆர் அலுவலகத்தில் நடைபெற்ற திட்டத்திற்கான ஒப்புதல் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தியோ நி சிங் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கட்டிடத்தின் ஒரு பகுதி நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய கட்டுமானப் பணிகள் தொடரலாம் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)