Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

மத்திய கிழக்கு மோதல்; மூலதனச் சந்தையை நிலைப்படுத்துவதில் தென் கொரியா தீவிரம்

06/03/2026 02:43 PM

சியோல், 06 மார்ச் (பெர்னாமா) --  100 லட்சம் கோடி வொன் மதிப்புள்ள நிதி உதவியை உடனடியாக செயல்படுத்துமாறு தென் கொரிய அரசாங்கத்திற்கு அதன் அதிபர் லீ ஜே மியுங் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலைத் தொடர்ந்து மூலதனச் சந்தையை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த வார இறுதியில் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களினால் நிலவி வரும் சூழல் குறித்து விவாதிக்கப்பட்ட சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதிகரித்து வரும் நெருக்கடியால் உலகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளதை லீ சுட்டிக்காட்டினார்.

தென் கொரிய கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதோடு, மத்திய கிழக்கில் உள்ள தென் கொரிய மக்களுக்காக இராணுவ விமானங்கள் மற்றும் சிறப்பு வாடகை விமானங்கள் உள்ளிட்ட அனைத்து முறைகளையும் பயன்படுத்தி அவசரகால வெளியேற்றத் திட்டத்தை வகுக்கவும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)