Ad Banner
Ad Banner
Ad Banner
 

ஆசிய வெற்றியாளர் லீக் கிண்ணம்; சான்ஃப்ரெச்சே ஹிரோஷிமாவை வீழ்த்தியது ஜே.டி.தி

05/03/2026 05:15 PM

இஸ்கண்டார் புத்ரி, மார்ச் 05 (பெர்னாமா) -- 2025/2026- ஆம் ஆண்டின் ஆசிய வெற்றியாளர் லீக் கிண்ண காற்பந்து போட்டியின் 16-வது சுற்றில், ஜோகூரின் ஜே.டி.தி, சான்ஃப்ரெச்சே ஹிரோஷிமாவை 3 -1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இவ்வெற்றியின் வழி, பயிற்சியாளர் சிஸ்கோ முனோசின் தலைமையிலான ஜே.டி.தி, வரும் மார்ச் 11-ஆம் தேதி சான்ஃப்ரெச்சே ஹிரோஷிமாவின் எடியான் பீஸ் விங் அரங்கில் நடைபெறவுள்ள போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று, சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், சான்ஃப்ரெச்சே ஹிரோஷிமா அணியின் ஆட்டக்காரர் கிம் ஜூ சுங்க்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வணி 10 ஆட்டக்காரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனிடையே, போட்டியின் இரண்டாம் பாதியில் ஜே.டி.தி-இன் ஏஜர் அகெடெக்ஸ் தமது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

ஆட்டம் விறுவிறுப்பாக சென்ற நிலையில், 63-வது நிமிடத்தில் பெர்க்சன் டா சில்வா ஒரு கோலை அடித்து ஜே.டி.தி-இன் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

அதனைத் தொடர்ந்து, ஜே.டி.தி-இன் மார்கோஸ் கில்ஹெர்ம், 84-வது அணிக்கான மூன்றாவது கோலைப் போட்டார்.

இதனிடையே, 86-வது நிமிடத்தில் சான்ஃப்ரெச்சே ஹிரோஷிமா ஆட்டக்காரர் நேனே, தமது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

ஆட்டம் 3-1 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)