வாஷிங்டன், டி.சி., 03 மார்ச் (பெர்னாமா) -- ஈரான் மீதான தாக்குதல்கள் நான்கு முதல் ஐந்து வாரங்கள் நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஈரான் மீது இதுவரை மிகப்பெரிய தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை என்றும் இனி கடுமையான தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
''இந்த தீய ஆட்சியால் முன்வைக்கப்படும் தாங்க முடியாத அச்சுறுத்தல்களை அகற்றவும், இப்போது நமது தாக்குதலைத் தொடரவும் எங்களுக்குக் கிடைத்த கடைசி சிறந்த வாய்ப்பு. அவை (ஈரான்) உண்மையில் தீயவை. எங்கள் நோக்கங்கள் தெளிவாக உள்ளன. முதலில், ஈரானின் ஏவுகணைத் திறன்களை நாங்கள் அழித்து வருகிறோம்,'' என்று அவர் கூறினார்.
இருப்பினும், தற்போது பெரிய அளவிலான தரைப்படையை ஈரானுக்கு அனுப்பும் திட்டம் எதனையும் அமெரிக்கா கொண்டிருக்கவில்லை டிரம்ப் கூறினார்.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட முதல் தாக்குதலில் ஈரானின் உயர் மட தலைவர் அயத்துல்லா அலி கமேனி பலியானதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இலக்கு திட்டமிடப்பட்டதை விட முன்னதாகவே அடையப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் ஏவுகணைத் திறன்களை அழிப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என்று டிரம்ப் தெரிவித்தார்.
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து டிரம்ப் முதன்முதலாக பொதுவில் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)