கராச்சி, 2 பிப்ரவரி (பெர்னாமா) -- இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலால், ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கராச்சி நகரில் நேற்று நூற்றுக்கணக்கான ஈரான் ஆதரவாளர்கள் அமெரிக்கத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் வெளிப்புறச் சுவரை உடைத்து உள்ளே நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களினால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 34 பேர் காயமடைந்தனர்.
தூதரக வளாகத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பொருள்களை சூறையாடிதாக கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
பாகிஸ்தானில் உள்ள மேற்கத்திய தூதரகங்கள் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தியுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)