Ad Banner
Ad Banner
 பொது

பொது மக்களின் புகார்களைத் தொடர்ந்தே 'ஸ்ட்ரீட் டக்வா'வில் நடவடிக்கை எடுக்கப்பட்டது

26/02/2026 03:37 PM

கோலாலம்பூர், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஸ்ட்ரீட் டக்வா தளத்தில், கூடாரம் பொருத்தியது தொடர்பாக, பொது மக்கள் அளித்த புகாரின் பேரில், கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல் அவ்விடத்தில் நடவடிக்கையை மேற்கொண்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற டி.பி.கே.எல் அமலாக்கத் தரப்பினர், அங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னதாக, சுமார் அரை மணி நேரம் காத்திருந்தும், சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வந்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.

''டி.பி.கே.எல் எடுத்த பொருட்கள், ஒன்று நாற்காலி, இரண்டாவது ஒரு மடிப்பு மேசை, மூன்றாவது ஒரு கூடாரம் மற்றும் விதானம், நான்காவது ஒரு சக்கர தள்ளுவண்டி. இது உண்மையான பிரச்சினை. ஒரு டக்வா பிரச்சினை அல்ல. இது அவ்விடத்தில் உள்ள விதான புகார் தொடர்பான பிரச்சினை,'' என்றார் அவர்.

இன்று, மக்களவைக் கூட்டத்தின்போது ஹன்னா யோ அவ்வாறு தெரிவித்தார்.

சில தரப்பினரின் உணர்வுகள் மற்றும் கருத்துக்கள், சம்பவ இடத்தில் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)