Ad Banner
 பொது

இந்திரனின் மரணத்தில் கொடுமைப்படுத்துதல் & பகடிவதைக் கூறுகள் இல்லை

21/02/2026 05:05 PM

ஜோகூர் பாரு, 21 பிப்ரவரி (பெர்னாமா) -- இராணுவப்படை உறுப்பினர் கே. இந்திரனின் மரணத்தில் கொடுமைப்படுத்துதல் அல்லது பகடிவதைத் தொடர்பான கூறுகள் கண்டறியப்படவில்லை.

இன்று காலை நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

''இல்லை. (இந்தப் பிரச்சினையை) அரசியலாக்காதீர்கள். இதுபோன்ற விஷயங்களை அரசியலாக்காதீர்கள். அவர்கள் முறையாக விசாரிக்கட்டும்,'' என்றார் அவர்,

பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியில், பள்ளிக்குத் திரும்புவதற்கான உதவித் தொகையை இன்று வழங்கியப் பின்னர் காலிட் அவ்வாறு கூறினார்.

தேவைப்பட்டால் இதன் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள ஒரு சிறப்புக் குழுவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் தாம் நிராகரிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்திரனின் மரணம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பினாங்கு மஇகா கேட்டுக் கொண்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)