Ad Banner
 பொது

இணைய மோசடிகளை எதிர்க்கும் உறுதிப்பாட்டில் ONSA

21/02/2026 04:41 PM

கோலாலம்பூர், 21 பிப்ரவரி (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி அமல்படுத்தப்படும் இணையப் பாதுகாப்புச் சட்டம், ஓ.என்.எஸ்.ஏ மூலம், சமூக ஊடகத் தளங்களில் அதிகரித்து வரும் இணைய மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதிப்பாட்டை தொடர்பு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அச்சட்டம் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படுவதை உறுதிசெய்ய, வயது வரம்பு உட்பட தற்போது சமூக ஊடகங்களுக்கான ஒழுங்குமுறை வழிமுறைகளை ஆய்வு செய்வதற்கான ஓர் ஒழுங்குமுறை அணுகுமுறை அல்லது ஒழுங்குமுறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''சமூக ஊடகங்களுக்கு ஓ.என்.எஸ்.ஏ பயன்படுத்தப்படுகிறது. இதற்குப் பின்னரும் செயற்கை நுண்ணறிவு மோசடி, முதலீட்டு மோசடி, இணைய சூதாட்டம் ஆகியவற்றை அவர்கள் தொடர்ந்து அனுமதித்தால், பத்து லட்சம் ரிங்கிட் முதல் ஒரு கோடி ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். அவர்கள் தங்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் புரிந்துகொள்வதை உறுதிசெய்ய நாங்கள் அவர்களுக்கு சிறிது அவகாசம் வழங்குகிறோம்,'' என்றார் அவர்.

இன்று கே.எல் கேட்வே பேரங்காடியில், கலை மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பு திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர், ஃபஹ்மி செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.

பாதுகாப்பான இலக்கவியல் சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்வதைத் தவிர, மோசடிகள் மற்றும் சிறுவர்களின் மன வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பரப்புதல் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் இச்செயல்முறை அவசியமானது என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)