புத்ராஜெயா, 19 பிப்ரவரி (பெர்னாமா) -- முழுமையான மற்றும் நியாயமான விசாரணையை மேற்கொள்ளாமல் அரசாங்க அதிகாரிகள் அல்லது ஊழியர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டாம் என்று அனைத்து அரசாங்கத் துறைகளுக்கும் நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டினார்.
எந்தவொரு நடவடிக்கையும் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர சுயநலத்தின் பேரில் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிகார மீறல்களை எதிர்த்து போராடுவதில் அரசாங்க உறுதிப்பூண்டிருந்தாலும், ஒழுக்கமும் ஒருமைப்பாடும் சமரசம் செய்யப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்காக அரசாங்கத் துறையில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் நீதி வழங்கப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
எஸ்.பி.ஆர்.எம் போன்ற அமைப்புகள் உட்பட தற்போதுள்ள செயல்பாட்டு தர விதிமுறைகள், SOP-யைப் பின்பற்றி ஒவ்வொரு புகாரும் அடையாளம் காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தியாகம் செய்த மக்கள், அந்த பலவீனம் கொள்கையை மீறுகின்றது அல்லது ஒரு மிகப் பெரிய தவறை மீறுகின்றது. அது உரிய செயல்முறையைப் பின்பற்றுகிறது. கடுமையான புகார்கள் இருந்தால் எஸ்.பி.ஆர்.எம் வழக்கில் தற்போது விவாதிக்கப்படும் அதே செயல்முறைக்கு அதை கொண்டு செல்லுங்கள்", என்றார் அவர்.
அதோடு, தனிப்பட்ட வெறுப்பு, குழு வேறுபாடுகள் அல்லது முந்தைய பகை காரணமாக நிறுவனத் தலைவர்களிடையே எந்தவொரு பிளவுபடுத்தும் மனப்பான்மையும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் எச்சரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)