லண்டன், 16 பிப்ரவரி (பெர்னமா) -- இங்கிலாந்து எஃப்.ஏ கிண்ண காற்பந்து போட்டியின் ஐந்தாம் சுற்றுக்கு, ஆர்செனல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முன்னேறியுள்ளது.
சொந்த அரங்கில் விளையாடிய மைக்கில் அர்தெத்தா தலைமையிலான ஆர்செனல் 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் விகான் அணியை எளிதாக வீழ்த்தியது.
இன்று அதிகாலை எமிரேட்ஸ் அரங்கில் நடந்த இந்த ஆட்டம் ஆர்செனலுக்கு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தியது.
போட்டி தொடங்கிய 27 நிமிடங்களில் நான்கு கோல்களையும் அடித்து ஆர்செனல் அதிரடி படைத்தது.
முதல் இரு கோல்கள் 11 மற்றும் 19-வது நிமிடங்களில் போடப்பட்ட வேளையில், மூன்றாவது கோல் சொந்த கோலானது.
நான்காவது கோலுடன் முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில், இரண்டாம் பாதியில் கோல் ஏதும் போடப்படவில்லை.
2020-ஆம் ஆண்டு எஃப்.ஏ கிண்ணத்தை வென்ற ஆர்செனல் தற்போது மீண்டும் சிறந்த 16 அணிகளுக்குள் முன்னேறியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)