கோலாலம்பூர், 14 பிப்ரவரி (பெர்னாமா) -- பெர்சத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தாம் தற்போது சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாக பெர்சத்துவின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் அறிவித்திருக்கின்றார்.
எனினும், தமது அரசியல் போராட்டத்திற்கான வழியைத் தேர்வு செய்வதில், புதிய கட்சி அமைப்பதா, பழைய கட்சியில் இணைவதா அல்லது வேறு தளத்தை நாடுவதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பெர்சத்துவில் இருந்து தாம் நீக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் ஹம்சா குறிப்பிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)