Ad Banner
 பொது

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை விபத்து; பெண் பலி

13/02/2026 02:13 PM

சுங்கை புவாயா, 13 பிப்ரவரி (பெர்னாமா) --  சிலாங்கூர், சுங்கை புவாயாவை நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை 438.5 கிலோமீட்டரில், இன்று அதிகாலை மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து காலை மணி 6.30க்கு அவசர அழைப்பு கிடைத்ததும், புக்கிட் செந்தோசா தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர்.

Perodua Myvi ரக காரும் Honda Jazz காரும் விபத்துக்குள்ளானதில் 44 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, சிலாங்கூர் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

காயமடைந்த இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)