Ad Banner
 பொது

தாயாரை கொலை செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

11/02/2026 06:09 PM

அலோர் ஸ்டார், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- இம்மாதத் தொடக்கத்தில், வங்கிப் பணியாளரான தனது தாயாரை கொலை செய்ததாக தொழிற்சாலை ஊழியர் ஒருவர் இன்று அலோர் ஸ்டார் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 

மஜிஸ்திரேட் எலியான இஸ்மாயில் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை, அமிருல் ஷாஃபிக் ஷம்சுல் சஹாரி புரிந்ததாக தலை அசைத்தாலும், கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. 

கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி அதிகாலை மணி 3.15-இல் இருந்து காலை மணி எட்டுக்குள், தாமான் சுல்தான் அப்துல் ஹலிமில் உள்ள வீடொன்றில் 52 வயதான சாருல்லாயில் பாசிரை கொலை செய்ததாக 29 வயதான அமிருல் ஷாஃபி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறை மற்றும் 12-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதால் இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை வரும் மே 11-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

--பெர்னாமா
    
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]