Ad Banner
 பொது

காசநோய் தொற்று; ஜோகூரில் அதிகபட்சமாக 37 சம்பவங்கள் பதிவு

10/02/2026 05:22 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 10 (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை வரை காசநோய் தொடர்பாக, ஏழு மாநிலங்களில் 10 புதிய உருமாற்றுத் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

அதில், ஜோகூர் மாநிலம் அதிகபட்சமாக 37 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது

அம்மாநிலத்தில் மொத்தம் 29 சிறுவர்களுக்கும் எட்டு பெரியர்வர்களுக்கும் இந்நோய்க் கண்டிருக்கும் வேளையில், கோத்தா திங்கியைச் சேர்ந்த 72 வயது முதியவருக்கு உருமாற்றத் தொற்று ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று சோதனைகள் மேற்கொண்டதில், மொத்த நோய் சம்பவங்களில் 36, தீவிரமான நிலையில் உள்ளது கண்டறியப்பட்டதாக சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

"காசநோய் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கை, நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்வதாகும். மேலும் எங்களிடம் பல வகையான மருந்துகள் உள்ளன. இது கோலா லங்காட் உள்ளிட்ட பகுதிகளில் நன்கு தெரிந்த நடைமுறையாகும்," என்றார் அவர்.

மாநில ரீதியில் காசநோய் தொற்று பரவலின் அண்மைய நிலை, கண்காணிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, பரவலைத் தடுக்கும் பரிசோதனை மற்றும் சிறப்பு கட்டுப்பாட்டுகள் தொடர்பில், கோலா லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அஹ்மட் யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்கு டாக்டர் சுல்கிஃப்லி அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)