Ad Banner
 பொது

தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய அடிக்கல் நாட்டு விழா

06/02/2026 07:00 PM

செந்தூல் , பிப்ரவரி 6 (பெர்னாமா) -- புதிய கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா காலை மணி 8 அளவில், புனித நீர் தெளிக்கப்பட்டு, மங்கள இசையோடும், சிறப்பு பூஜையோடும் தொடங்கப்பட்டது.

ஆலயத்திற்கு வருகைத் தரும் மக்களுக்கு போதிய இடவசதியை ஏற்படுத்தித் தருவதோடு, சமய வகுப்புகளை நடத்தவும், ஆலயத்தின் தொன்மையான வழிபாட்டு முறைகளைப் பேணிப் பாதுகாக்கவும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தேவி ஸ்ரீ மகா காளியம்மன் தலைவர் சுரேந்திரன் சந்திரசேகரன் தெரிவித்தார்.

''இப்போது நிறைய திருமணங்கள், சமய நிகழ்ச்சிகள் போன்றவற்றை இந்த கோவிலில் நடத்துவதற்காக பொதுமக்கள் கேட்கின்றனர். எங்களுக்கு இட வசதி இல்லை. அதனால் தான், இக்கோவிலை கட்ட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அன்னதானம் போடுவதற்கும் இடம் இல்லாமல் இருக்கின்றது. அதுவும் மழைக் காலங்களில் இன்னும் கடினமாக இருக்கும்,'' என சுரேந்திரன் சந்திரசேகரன் கூறினார். 

கட்டுமானப் பணிகள் நடைபெறும் கால கட்டங்களில், மூலஸ்தானத்தில் இருக்கும்
மகா காளியம்மன் வேறு இடத்திற்கு மாற்றப்படாமல், தற்போதுள்ள சன்னதியிலேயே தொடர்ந்து வீற்றிருப்பார் எனவும் அவர் கூறினார்.

மேலும், இந்த கட்டுமானக் கால இடைவெளியில், தங்களின் வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றுவதற்கான வழிகள் குறித்தும் அவர் விளக்கினார்.

''நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவெனில், இரண்டு வருவங்களுக்கு கோவிலில் கட்டுமானப்பனி நடைப்பெற உள்ளதால் தங்கள் வேண்டுதல்களை அன்னதானமாக கொடுங்கள்,'' என சுரேந்திரன் தெரிவித்தார். 

இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு பத்து நாடளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமேஸ்வரன் சிறப்பு வருகை புரிந்த வேளையில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)