பட்டர்வொர்த், 06 பிப்ரவரி (பெர்னாமா) -- பட்டர்வொர்த், சுங்கை டுவா செம்பனைத் தோட்டத்தில் உள்ள ஒரு கிடங்கில், ஜனவரி 6-ஆம் தேதி தமது தரப்பு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வரி செலுத்தாத மதுபானங்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலையாக அவ்விடம் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டதாக டத்தோ ரோஹாய்சாட் அலி கூறினார்.
உளவுத் துறை வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில், 10,000-க்கும் மேற்பட்ட பாட்டில்கள் அல்லது சுமார் 4,200 லிட்டர் விஸ்கி ரக மதுபானத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அவ்வனைத்து மதுபானங்களும் ஐந்து லட்சத்து 16 ஆயிரத்து 71 ரிங்கிட் வரியுடன் சேர்த்து மொத்தம் ஏழு லட்சத்து 17 ஆயிரத்து 963 ரிங்கிட் என்று கூறப்பட்டுள்ளது.
''மதுபானங்களைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பிற உபகரணங்களில், Etanol நிரப்பப்பட்ட பீப்பாய்கள், போலி சுங்க வரி முத்திரைகளின் சுருள்கள், மதுபான பேக்கேஜிங் உபகரணங்கள், கேப்பிங் இயந்திரங்கள் மற்றும் வில்லைகள் ஆகியவை அடங்கும்'', என்றார் அவர்.
1976-ஆம் ஆண்டு கலால் சட்டம், செக்ஷன் 20 உட்பிரிவு ஒன்று மற்றும் செக்ஷன் 74 உட்பிரிவு ஒன்று மற்றும் F-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)