வொரோ, பிப்ரவரி 06 (பெர்னாமா) -- நைஜீரியாவில் வொரோ எனும் கிராமத்தில், கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 170 பேர் கொல்லப்பட்டனர்.
பிப்ரவரி மூன்றாம் தேதி நடத்தப்பட்ட இத்தாக்குதலுடன், அக்கிராமத்தில் உள்ள வீடுகளும் கடைகளும் தீக்கிரையாகின.
Woro உட்பட இரு கிராமங்களுக்குள் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தாக்குதலில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற முயன்ற பாதுகாலவர்களும் இச்சம்பவத்தில் பலியாகினர்.
நைஜீரியாவில் கொள்ளையர்கள், பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், அந்நாட்டில் பதற்றமான சூல்நிலை உருவாகியுள்ளது.
இதனால் பொதுமக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)