Ad Banner
 விளையாட்டு

ஆசிய குழுக்களுக்கான பூப்பந்து போட்டி; மகளிர் அணி தோல்வி

04/02/2026 07:05 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 04 (பெர்னாமா) -- சீனா, கிங்டாவ்வில் நடைபெற்று வரும் ஆசிய குழுக்களுக்கான பூப்பந்து போட்டி.

இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் நாட்டின் மகளிர் அணி உபசரணை நாட்டு அணியுடன் 1-4 என்ற நிலையில் தோல்வி கண்டது.

வெற்றி பெறுவார் கணிக்கப்பட்டிருந்த நாட்டின் மகளிர் ஒற்றையர் 
கே. லெட்ஷனா சீனாவின் ஹான் சியான் ஷியாவிடம் 18-21, 10-21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய நாட்டின் மகளிர் இரட்டையர் ஓங் சின் யீ-கார்மென் டிங் ஜோடியும் சீனாவின் ஜியா யி ஃபான்-ஜாங் ஷூ சியான் ஜோடியிடம் 10-21, 8-21 என்ற புள்ளிகளில் எளிதாகத் தோல்வியைத் தழுவியது.

2-0 என்ற புள்ளிகளில் முன்னனி வகித்த சீனா மூன்றாவது ஆட்டத்திலும் வெற்றி பெற்று தனது வெற்றியை உறுதி செய்துக் கொண்டது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றோர் இரட்டையர் ஆட்டத்தில் லோ ஸி யூ-நோராகிலா மைசாரா ரம்தான் சீன விளையாட்டாளர்களை 13-21, 21-18, 21-17 என்ற புள்ளிகளில் தோற்கடித்து மலேசியாவுக்கான ஒரே புள்ளியைப் பெற்றுத் தந்தனர்.

நிறைவாக நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் சீனா வெற்றி பெற்று முதல் சுற்று ஆட்டத்தை 1-4 என்ற நிலையில் தனது சாதகமாக முடித்து வைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)