பெய்ஜிங், 16 மே (பெர்னாமா) -- சீனாவுக்கான பயணத்தை நிறைவு செய்திருக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இருதரப்புகளுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு உலகின் கவனத்தை ஈர்த்ததோடு வெற்றிகரமாகவும் முடிவடைந்ததாக வர்ணித்துள்ளார்.
தம்மை சோங்னன்ஹாயிற்க்கு அழைத்ததற்காக ஸி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட டிரம்ப், இந்த முறை சீனாவிற்கான தமது பயணம் எளிதில் மறக்க முடியாததாது எனவும் விவரித்தார்.
இரு தரப்பும் தொடர் முக்கிய புரிந்துணர்வுகளை எட்டியுள்ளதாகவும், பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், டோனால்ட் டிரம்ப் கூறினார்.
இச்சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் உலகிற்கும் பெரும் நன்மைகளை வழங்கும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜின்பிங்கைத் தனது பழைய நண்பர் என்று வர்ணித்த டிரம்ப், அந்தத் தலைவர் மீது ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தியதோடு, தாங்கள் ஒரு நல்ல உறவை வளர்த்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா-சீனா உறவுகள் மிகவும் முக்கியமானவை என்றும், எதிர்காலத்தில் அவை நிச்சயமாக மேம்படும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)