ஜாலான் பார்லிமன், பிப்ரவரி 4 (பெர்னாமா) -- கூட்டரசு சாலைகளில் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் மற்றும் குழிகள் போன்ற பிரச்சனைகளைக் களைவதற்கு, பொதுப்பணி அமைச்சு, மூன்று முதன்மை பராமரிப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தி வருகிறது.
வழக்கமான பராமரிப்பு, குறிப்பிட்ட கால இடைவெளியிலான பராமரிப்பு மற்றும் அவசரகால பராமரிப்பு ஆகியவற்றை உட்படுத்தி, நியமிக்கப்பட்ட கூட்டரசு சாலை பராமரிப்பு குத்தகை நிறுவனங்கள் அந்த நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது.
சாலையில் ஏற்பட்டுள்ள சிறிய சேதங்கள் மேலும் மோசமடையாமல் தடுக்க, குழிகளை முன்கூட்டியே சரிசெய்வது போன்ற வழக்கமான பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக, பொதுப்பணி துணை அமைச்சர், டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.
''வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் அவசரகால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் சேதத்தின் அளவு மற்றும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சீரமைப்புப் பணிகள் அமையும். குறிப்பாகப் நெறிமுறை சாலை, முதன்மை இரண்டாம் நிலை சாலைகளில் ஏற்படும் குழிகள் அடைக்கப்படும். அதோடு, கூட்டரசு சாலைகளில் கண்டறியப்படும் குழிகள் 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்,'' என டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் மஸ்லான் கூறினார்.
2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்கப்பட்ட சாலை பராமரிப்பு ஒதுக்கீடுகள் குறித்தும், சாலை பிரச்சனைகள் சேதமடைந்த, மற்றும் குண்டும் குழியுமான சாலை பிரச்சனைகளைத் திறம்படத் தீர்க்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும், ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்ஹாரி கெச்சிக் எழுப்பிய கேள்விக்கு, அவர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)