தாவாவ், பிப்ரவரி 02 (பெர்னாமா) -- இன்று காலை சபா, தாவாவ்வில் உள்ள கம்புங் திதிஙான் தேசிய பள்ளி அருகே நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 40 வீடுகள் தீக்கிரையாகின.
இச்சம்பவம் தொடர்பில் காலை மணி 10.15 அளவில் தங்கள் தரப்பு அழைப்பு கிடைத்ததாகவும் 10.23 அளவில் சம்பந்தப்பட்ட இடத்தைச் சென்றடைந்ததாகவிம் சபா, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தாவாவ் மண்டலத் தலைவர் மொய்லி மிலின் தெரிவித்தார்.
''இந்த முறை தீயை அணைப்பதில் நீர் அழுத்தம் ஒரு முக்கியப் பிரச்சனையாகும். நாங்கள் பயன்படுத்தும் நீர் தீயணைப்புத் துறையின் டேங்கர் லாரிகளில் இருந்து வருகின்றது'', என்றார் மொய்லி மிலின்.
இதுவரை உயிரிழப்பு சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.
தீச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)