Ad Banner
Ad Banner
 உலகம்

பலுசிஸ்தானின் பல்வேறு நகரங்களில் தாக்குதல்; 92 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

01/02/2026 04:08 PM

பலுசிஸ்தான், பிப்ரவரி 1 (பெர்னாமா) -- பாகிஸ்தான் தென்மேற்கு மாநிலமான பலுசிஸ்தானின் பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை, பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற தாக்குதலில், குறைந்தது 92 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்தாக்குதலின்போது, இராணுவப் படை வீரர்களில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

அதற்கு முதல் நாள் இராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின்போது 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான பலுச் விடுதலைப் படை சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)