Ad Banner
 பொது

வளர்ச்சி நீரோட்டத்தில் எத்தரப்பினரும் விடுபட்டு விடக்கூடாது

01/02/2026 03:20 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 1 (பெர்னாமா) -- நாட்டிலுள்ள எந்தவொரு தரப்பினரும் விடுபடாமல், முன்னேற்றத்திற்கான பலன்களை முழுமையாக அனுபவிக்கும் வகையில், மேம்பாட்டிற்கான அனைத்து முயற்சிகளும் கவனமாக கையாளப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் முன்னேற்றம் என்பது உள்கட்டமைப்பு வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுவது சரியானதல்ல.

மாறாக, மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இன்று கொண்டாட்டப்படும் கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு பிரதமர் கூறினார்.

தாம் முன்வைக்கும் ஒவ்வோர் அடியும், நீதி மற்றும் சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்படுவதாக இன்று தமது முகநூல் பதிவில் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி அனைத்து வளர்ச்சிகளும் எல்லாத் தரப்பினரும் சமமாகவும் முழுமையாகவும் பெற்று வளர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் மடானி அரசாங்கத்தின் தார்மீக கொள்கையான பரிவு, பரஸ்பர மரியாதை மற்றும் ஒற்றுமை ஆகியவை நல்லிணக்கம், நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று அன்வார் இப்ராஹிம் அப்பதிவில் எடுத்துரைத்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)