கனடா, ஜனவரி 31 (பெர்னாமா) -- கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து விமானங்கள் மீதும் 50 விழுக்காடு வரி விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார்.
அமெரிக்காவின் 'Gulfstream' நிறுவனம் தயாரித்த வணிக ஜெட் விமானங்களுக்குக் கனடா உடனடியாகச் சான்றிதழ் வழங்கத் தவறினால் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
Gulfstream G500, G600, G700 மற்றும் G800 உள்ளிட்ட பலவேறு விமான மாதிரிகளுக்குச் சான்றிதழ் வழங்க கனடாமறுத்து வருவதாகத் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்குப் பதிலடியாக கனடாவின் 'Bombardier Global Express' விமானங்களுக்கான சான்றிதழை ரத்து செய்யப்போவதாகவும், தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத கனடா தயாரிப்பு விமானங்கள் மீது கடும் வரி விதிக்கப்படும் என்றும் வாஷிங்டன் எச்சரித்துள்ளது.
இதனால் இருநாடுகள் இடையேயான வர்த்தக போர் இன்னும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனிடையே கனடா பிரதமர் மார்க் கார்னி நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைத் நிராகரிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)