கோலாலம்பூர், ஜனவரி 28 (பெர்னாமா) -- இயந்திரங்கள், மின் உற்பத்தி, குளிரூட்டி மற்றும் உந்துவிசை அமைப்புகளை சோதிக்கும் நோக்கத்திற்காக எல்.சி.எஸ் 1 எனப்படும் கடலோர போர்க் கப்பல் கே.டி. மகாராஜலேலா இன்று தனது முதல் கடல் பயணத்தைத் தொடங்கவிருக்கிறது.
எல்.சி.எஸ் 1 கப்பல் கடலில் பயணிக்கும் திறன் கொண்டதா என்பதை உறுதி செய்வதற்கான தொடக்க செயல்முறை அதுவாகும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறினார்.
''அசல் அட்டவணையுடன் ஒப்பிடும்போது தாமதம் இருந்தபோதிலும் எல்.சி.எஸ் 1 கப்பல் வெற்றிகரமாக நீரில் செலுத்தப்பட்டு இப்போது கப்பலின் முக்கிய அமைப்புகளின் நிறுவல் மற்றும் ஒருங்கிணைப்பு கட்டத்தில் இருப்பதாக லூநாஸ் அமைச்சிடம் தெரிவித்தது.'' என்றார் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின்
கப்பல் கட்டுமானத் தள மட்டத்தில் எல்.சி.எஸ் 1 கப்பலுக்கான கடல் சோதனை கட்டம் ஜனவரி 20-ஆம் தேதி முதல் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோல் நிலையங்களில் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் RON95 பெட்ரோலை வாங்குவதற்கு சிறப்பு தடையை அமல்படுத்தும் புதிய விதிமுறைகளை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் வரைந்து வருகிறது.
1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம், செக்ஷன் 6 கீழ், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதை அந்நடவடிக்கை உள்ளடக்கியிருப்பதாக அமைச்சர், டத்தோ அர்மிசான் முஹமட் அலிதெரிவித்தார்.
''எனவே, தற்போது நாம் உருவாக்கி வரும் புதிய விதிமுறைகள் மூலம், இந்தத் தடை விற்பனை மட்டுமின்றி, கொள்முதலையும் உள்ளடக்கும். அதாவது வெளிநாட்டுப் பதிவுகள் கொண்ட வாகனங்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள் அல்லது ஓட்டுபவர்கள், அப்பெட்ரோலை வாங்கினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.'' என்றார் டத்தோ அர்மிசான் முஹமட் அலி
புதிய விதிமுறைகளை இறுதி செய்து ஏப்ரல் முதலாம் தேதி அமல்படுத்துவதற்கு கே.பி.டி.என் சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்துரையாடலை மேற்கொண்டு வருகிறது.
இலக்கவியல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஏற்ப 16 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடையவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைக் கொண்டிருக்காமல் இருப்பதை உறுதி செய்யவே வயது சரிபார்ப்பு செயல்முறை அமல்படுத்தப்படுகிறது.
MyDigital ID அடையாள அட்டை அல்லது கடப்பிதழ் உட்பட சரிபார்ப்பு முறை பின்னர் தீர்மானிக்கப்படும் என்று தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
''சரிபார்ப்பு செயல்முறை அமல்படுத்தப்பட்ட பின்னர், பயனர் அல்லது கணக்கு உரிமையாளரின் அடையாளம் குறித்த தகவல்களை அரசாங்கம் சேகரிக்காது. இந்த செயல்முறை வயது சரிபார்ப்புக்கு மட்டுமே.'' என்றார் தியோ நீ சிங்
இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின்போது அவர் அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)