Ad Banner
 பொது

அனைத்து விதிமுறைகளும் முறையாக இருந்தால் திட்டங்களுக்கான அங்கீகாரம் விரைவாகும்

27/01/2026 06:34 PM

செமின்ஞே, 27 ஜனவரி (பெர்னாமா) -- நிர்ணயிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளும் நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும் பட்சத்தில், விண்ணப்பிக்கப்படும் திட்டங்களுக்கான அங்கீகாரத்தை அரசாங்கம் விரைவுபடுத்தும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்குமானது எனவும் அவர் கூறினார்.

இன்று, சிலாங்கூர், செமின்ஞே-வில் உள்ள கம்போங் சுங்காய் பெனிங், நடைபெற்ற 
செமின்ஞே பொது உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் தொடக்க விழாவில் ஆற்றிய உரையில், ஒப்புதல் செயல்பாட்டில் தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இது மலேசியாவின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை பாதிக்கக்கூடும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

''எனவே, அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், அதைத் தாமதப்படுத்தாமல் விரைந்து செயல்படுத்த வேண்டும். கோலாலம்பூரில் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கு முன்பு 6 மாதங்கள் அல்லது 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். விதிமுறைகளும் நடைமுறைகளும் சரியாகப் பின்பற்றப்பட்டு, ஒரு திட்டத்திற்கு 2 மாதங்களில் ஒப்புதல் அளிக்க முடியும் என்றால், நாம் ஏன் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்?'' என டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வினவினார்.

திறமையான நிர்வாகம் மற்றும் விரைவான ஒப்புதல்கள் ஆகியவை வளர்ச்சித் திட்டங்களை கால அட்டவணையில் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும் அன்வார் கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)