Ad Banner
 உலகம்

மேற்கு ஜாவா நிலச்சரிவு; மரண எண்ணிக்கை உயர்கிறது

27/01/2026 06:08 PM

இந்தோனேசியா, 27 ஜனவரி (பெர்னாமா) -- இந்தோனேசியா, மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அடர்ந்த சேறு மற்றும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியை இந்தோனேசிய மீட்புக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மாலை நிலவரப்படி, ஒன்பது சடலங்கள் கண்டெடுக்கபட்டுள்ள வேளையில்,
இப்பேரிடரில் மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது என, Bandung தேடல் மற்றும் மீட்புப் பணி அலுவலகத் தலைவர், ஏடி டியான் பெர்மனா கூறினார்.

தரவுகளின் அடிப்படையில், இன்னும் 46 பேர் அந்த இடத்திலேயே புதையுண்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாகஏடி டியான் பெர்மனா கூறினார்.

இதுவரை கண்டெடுக்கப்பட்ட சடலங்களில், 17 உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள சடலங்களை அடையாளம் காணும் பணியைத் தடய அறிவியல் அணுகுமுறை குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக, ஏடி டியான் பெர்மனா தெரிவித்தார்.

தொடர்ந்து இரண்டு இரவுகள் பெய்த கனமழையினால், சிசாருவா மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படக் காரணமாகும்.

தேடல் மற்றும் மீட்புப் பணிகள் ஏழு நாட்களுக்குப் பிறகு மறுஆய்வு செய்யப்படும் என்றும், அதே வேளையில் 14 நாட்களுக்கான அவசரகால நடவடிக்கை அமலில் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)