Ad Banner
 விளையாட்டு

ஹரிமாவ் மலாயாவின் ஏழு ஆட்டக்காரர்கள் மீண்டும் விளையாட அனுமதி

27/01/2026 03:49 PM

கோலாலம்பூர், ஜனவரி 27 (பெர்னாமா) -- ஹரிமாவ் மலாயா காற்பந்து அணியில் இடம்பெற்றிருந்த குடியுரிமைப் பெற்ற ஏழு வெளிநாட்டு ஆட்டக்காரர்ககளுக்கு எதிரான தடை தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக் காற்பந்து ஆட்டங்களில் பங்கேற்பதற்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஒத்திவைக்க வேண்டும் என்று முன் வைத்த மனுவிற்கு விளையட்டு நடுவர் மன்றம் சி.ஏ.எஸ் அனுமதி அளித்துள்ளதாக மலேசிய காற்பந்து சங்கம் ஃப்.ஏ.எம் தனது முகநூல் பதிவில் அறிக்கை வழி தெரிவித்துள்ளது.

ஹரிமாவ் மலாயா அணியின் ஏழு விளையாட்டாளர்களுக்கு அனைத்துலக காற்பந்து சம்மேளனம் FIFA விதித்த 12 மாத இடைநீக்கத் தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஃப்.ஏ.எம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த ஏழுவரும் சி.ஏ.எஸ்-சில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் இறுதி தீர்ப்பு வரும் வரை தங்களின் ஆட்டங்களை தொடரவும் காற்பந்து தொடர்பான அனைத்து செயல்பாடுகளிலும் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஃப்.ஏ.எம்  மற்றும் மலேசிய குடியுரிமைப் பெற்ற அதன் அயல் நாட்டு ஆட்டக்காரர்கள் எழுவர், ஆவண மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளதாக FIFA ஒழுங்குமுறைக் குழு கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி குற்றம் சாட்டியது.

அதனைத் தொடர்ந்து ஃப்.ஏ.எம் மீது சுமார் 18 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ள வேளையில் ஆட்டக்கார்களுக்கு தலா சுமார் 10 ஆயிரத்து 560 ரிங்கிட் அபராதமும் வித்தித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)