வாஷிங்டன், 25 ஜனவரி (பெர்னாமா) -- சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் கனடா மீது 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
டிரம்ப்பின் இந்த அதிரடி முடிவினால், அமெரிக்காவுடனான வர்த்தகப்போர் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவுடனான வர்த்தகம், கனடாவுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்று டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
சீனாவுடனான ஒப்பந்தம் அந்நாட்டை ஆபத்தில் ஆழ்த்தும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னியை அவர் எச்சரித்தார்.
டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
கனடா, அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இருக்க வேண்டும் என்று டிரம்ப் முன்னதாக பரிந்துரைத்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)