Ad Banner
 அரசியல்

தேசிய முன்னணியில் உள்ள முக்கிய கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்

25/01/2026 06:00 PM

பகான் டத்தோ, 25 ஜனவரி (பெர்னாமா) --  மலேசிய இந்தியர் காங்கிரஸ், மஇகா உட்பட தேசிய முன்னணி கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.

அக்கூட்டணியின் உறுப்புக் கட்சியாக மக்கள் முற்போக்குக் கட்சி, பி.பி.பி மீண்டும் இணைத்திருப்பது, தேசிய முன்னணியை மேலும் வலுப்பெறச் செய்திருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள், ஒருவருக்கொருவர் மதிக்கின்றன என்பது தேசிய முன்னணியில் உள்ள எங்கள் கருத்து. ம.சீ.ச மற்றும் அம்னோ உடன் மஇகா ஒரு முக்கிய கட்சியாக இருந்து வருகிறது. மேலும் தேசிய முன்னணியில் இருக்கும் முக்கிய கட்சிகள் தொடர்ந்து பலப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்'', என்றார் அவர்.

இன்று, பேராக் பகான் டத்தோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், டாக்டர் அஹ்மாட் சாஹிட் செய்தியாளர்களிடம் பேசினார்.

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்து விவாதிக்க மஇகா விரைவில் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், கூட்டணி தொடர்பாக மஇகா அவசரக் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் அக்கட்சியின் உரிமை மற்றும் நிலைப்பாடு என்று அஹ்மாட் சாஹிட் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)