Ad Banner
 பொது

உப்சி பேருந்து விபத்து; இறுதி விசாரணை அறிக்கையை பொதுமக்கள் படித்து தெரிந்துக் கொள்ளலாம்

23/01/2026 06:48 PM

கோலாலம்பூர், 23 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி, கிரிக்-ஜெலி கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், உப்சி மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து தொடர்பான மரண விபத்தின் இறுதி விசாரணை அறிக்கையை, இன்று பிற்பகல் மணி 3 முதல் பொதுமக்கள் படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

அந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் பதிவேற்ற அனுமதி பெறப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டில் சாலைப் போக்குவரத்து பாதுகாப்பின் அளவை வலுப்படுத்துவதற்கான வெளிப்படைத்தன்மை, பொதுப் பொறுப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள் ஆகிய கொள்கைகளுக்கு மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை, அந்த அறிக்கை பிரதிபலிப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி, திரெங்கானு, ஜெர்தெவில் இருந்து பேராக் தஞ்சோங் மாலிம் சென்றுக் கொண்டிருந்த பேருந்து, பெரோடுவா அல்சா ரக காரின் பின்புறத்தை மோதி, சாலைத் தடுப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உப்சி மாணவர்கள் 15 பேர் பலியாகினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)