கோலாலம்பூர், ஜனவரி 21 (பெர்னாமா) -- அதிகார மீறல் மற்றும் ஊழல் விவகாரங்களில் தன்னைத் தொடர்புபடுத்தியதாகக் குற்றஞ்சாட்டி Chegubard என்று அழைக்கப்படும் அரசியல் ஆர்வலர் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் மீது மலேசிய இராணுவப்படை மூத்த அதிகாரி இணை தளபதி டத்தோ சப்ரி சளி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவதூறான அனைத்து அறிக்கைகளையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்திற்கு Chegubard தரப்பில் எவ்வித பதிலும் வரவில்லை.
அதனைத் தொடர்ந்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று அந்த அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக டத்தோ சப்ரியின் வழக்கறிஞர் முஹமட் ஃபிர்தௌஸ் ஜுமாலுதீன் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு ஜூலை முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் பிரதிவாதியான Chegubard மூத்த இராணுவ அதிகாரியான சப்ரி, ஊழல், அதிகார மீறல், நேர்மையின்மை மற்றும் ஏ.டி.எம் தலைமைப் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்று குற்றம் சாட்டி, சமூக ஊடகங்களில் பல எழுத்துப்பூர்வ அறிக்கைகள், காட்சிகள் மற்றும் காணொளிப் பதிவுகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)