Ad Banner
 பொது

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தேசிய தற்காப்பு தொழில்துறை கொள்கை

21/01/2026 05:01 PM

கோலாலம்பூர், ஜனவரி 21 (பெர்னாமா) -- நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, தற்காப்புத் துறைக்கான நம்பிக்கையை மீட்டெடுப்பது, நம்பகமான மற்றும் நேர்மையான உள்நாட்டு தொழில்துறையின் ஆற்றலை உருவாக்குவது ஆகியவற்றுக்கான புதிய முயற்சியாக, தேசிய தற்காப்பு தொழில்துறை கொள்கை, D-I-P-N இன்று தொடங்கப்பட்டது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இக்கொள்கை, காலத்தின் தேவைகளுக்கும் மலேசிய ராணுவப்படையின் தற்போதைய அவசியங்களுக்கும் ஏற்ப இப்போது அபல்படுத்தப்படுவதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''இந்த தற்காப்புத் தொழில்துறை கொள்கை உண்மையிலேயே நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. தற்போதைய காலத்தின் தேவைகளுக்கு ஏற்றதாகவும், அண்மையில் மலேசிய ராணுவப்படையைச் சூழ்ந்திருந்த நெருக்கடியை தணிக்கும் நம்பிக்கையைக் கொண்டதாகவும் நான் கருதுகிறேன்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில், DIPN-ஐ தொடக்கி வைத்தப் பின்னர் டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு உரையாற்றினார்.

நிர்வாகம் மற்றும் கழகத்தை வலுப்படுத்துவது தொடங்கி நான்கு முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு D-I-P-N செயல்படுத்தப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)