Ad Banner
 பொது

கடன் சுமையின்றி மேற்கல்வி தொடர 'கல்வி வங்கி கடன்கள்' திட்டம் அறிமுகம்

20/01/2026 06:12 PM

புத்ராஜெயா, ஜனவரி 20 (பெர்னாமா) -- வேலை காரணமாகப் பகுதி நேரமாகத் தங்களின் மேற்கல்வியைத் தொடரவும் கல்வி சார்ந்து விருதுகளைப் பெற தகுதி பெறும் வரை படிப்படியாகத் தங்களின் கடன்களைச் செலுத்த அனுமதிக்கும் வகையில் ‘Academic Bank Credits’ எனும் 'கல்வி வங்கி கடன்கள்' எனும் முயற்சியை உயர்கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தும் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் கூறினார்.

''எம்.ஃகியூ.ஏ தரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இம்முயற்சி முழுநேர கல்வியின்றி சுய அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கான சுதந்திரத்தை மாணவர்களுக்கு வழங்கும் இதில் தேர்வு அடங்கும். அதாவது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட தளர்வு. உதாரணமாக, மாணவர் ஒருவர் இப்போது ஒத்துழைத்தால் அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு பாடத்தைத் தேர்வு செய்து முதலில் அதை கற்பார். ஏனெனில் அவர் ஏற்கனவே எடுத்திருந்த பாடங்களை வைத்திருப்பார். இறுதியாக அவர் சேகரித்து அவர் எடுத்த பாடங்களை முடிப்பார். இறுதியாக அவர்கள் விரும்பும் சிறப்புப் பிரிவுகளுக்கு அவருக்கு அதே சேவை அல்லது டிப்ளோமா வழங்கப்படும்'', என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர்.

தொடக்கத்திலேயே வேலைக்குச் சென்றவர்கள் தங்களின் நேரத்திற்கு ஏற்ப படிப்படியாக உயர்க்கல்வியை மீண்டும் தொடர்வதற்கான இரண்டாவது வாய்ப்பை இது வழங்குகிறது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)