கோலாலம்பூர், ஜனவரி 20 (பெர்னாமா) -- அமெரிக்கா, மிச்சிகன்னில் உள்ள ஒட்டாவா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் அங்குள்ள I-96 நெடுஞ்சாலை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது.
இச்சம்பவத்தில் பலர் காயமடைந்திருப்பதாகவும் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.
காயமடைந்த சிலருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட வேளையில் இன்னும் சில மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மோசமான வானிலை மற்றும் கடுமையான பனிப்பொழிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மணிக்கு 32 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனம் செலுத்தியதால் தமக்கு முன்னால் இருந்த வாகனத்தைப் பார்க்க முடியவில்லை என்று விபத்தில் சிக்கிய ஒருவர் கூறினார்.
மீட்பு நடவடிக்கைகள் வாகனங்களை அகற்றுவது மற்றும் சாலையைச் சுத்தம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ள I-96 சாலையை அதிகாரிகள் தற்காலிகமாக மூடினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)