கோலாலம்பூர், ஜனவரி 20 (பெர்னாமா) -- ஆயிரத்து 100 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் 2026ஆம் ஆண்டிற்கான முதலாம் கட்ட ரஹ்மா உதவித் தொகை எஸ்.டி.ஆரை அரசாங்கம் இன்று விநியோகிக்க தொடங்கியது.
37 லட்சம் குடும்பங்கள் மற்றும் துணை இல்லாத 13 லட்சம் மூத்த குடிமக்களுக்கு இத்தொகை பயனளிக்கும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது
அவரவர் தகுதிக்கேற்ப ஒவ்வொருவருக்கும் 100 முதல் 500 ரிங்கிட் வரை வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்தது.
வாழ்க்கைச் செலவின சுமையைத் திறம்படக் குறைக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் மடானி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப இவ்வாண்டுக்கான எஸ்.டி.ஆர் மற்றும் ரஹ்மா அடிப்படை உதவித் தொகை சாராவை அரசாங்கம் மறுசீரமைத்துள்ளது.
இம்மறுசீரமைப்பின் மூலம் 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மாதாந்திர அடிப்படையில் சாரா உதவியைப் பெறத் தகுதி பெறுகின்றனர்.
அதுமட்டுமின்றி eKasih தரவுத்தளத்தின் அடிப்படையில் ஏழ்மை மற்றும் வறிய நிலையில் உள்ள 400,000 பேரும் இதில் அடங்குவர்.
அதோடு, மாதத்திற்கு 5,000 ரிங்கிட் அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் துணை இல்லாத மூத்த குடிமக்களுக்கும் eKasihஇல் பதிவுசெய்யப்பட்ட ஏழைகள் மற்றும் வறிய நிலை மக்களுக்கும் காலாண்டின் அடிப்படையில் கூடுதல் உதவியாக எஸ்.டி.ஆர் வழங்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)